குறிப்பு. இனி இப்பகுதி தமிழில் அமையும். இனி தொடர்ந்து எழுதுவேன்.
மதுரையில் அண்மையில் திருச்சிராப்பள்ளி – அல்லூர் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் இரா.இளங்குமரனார்
அவர்கள் 'நாமும் நம் மொழியும்' குறித்து பேசும் போது கீழ்க்கண்டவற்றை பின்பற்றும்படி
கூறினார்கள்.
- அனைவரும் நம் பெயரின் முதல் எழுத்தை தமிழில் தான் சொல்ல வேண்டும். ( நான் எப்போதும் என் இனிஷியலை தமிழில் மு.வீராசாமி என்று தான் சொல்லுவேன்)
- கன்னடர்களைப்போல், மலையாளிகளைப்போல், முடிந்தவரை நாம் ஒருவருக்கு ஒருவர் பேசும்போது த்மிழிலேயே பேசுவோம் என்றும், ஓரிரு சொல் கலப்பாக இருந்தால் பரவாயில்லை என்றும், நாளடைவில் சரியாகிவிடும் என்றும் கூறினார்.
- கடிதம் ஒரு ஆவணம் என்றும இனி அனைவரும் கடிதம் எழுத வேண்டும் என்றும் குறிப்பாக முக்கியமாக பெரிவர்களுக்கு எழுத வேண்டும் என்றார்.
- அவர்களின் பதில் கடிதத்தை பத்திரப்படுத்தவேண்டும் என்றும் அது பிற்காலத்தில் ஆவணமாக பயன்படும் என்றும் கூறினார்.
- நம் வீட்டில் சமயலறை, படுக்கை அறை இருப்பது போல சிற்ய நூலகம் ஒன்று இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளிடையே படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
- நம் மொழியை நாம் தானே வளர்க்க வேண்டும். . .
சிந்திப்போம்....
நல்ல கருத்து.முழுஆதரவுடனும்,வாழ்த்துக்களுடனும் பண்பாளன்.
பதிலளிநீக்கு