நாம் எங்கிருக்கிறோம்?
அந்தப் பச்சிளங்குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்?
நடந்தது. மத்தியபிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில். சென்ற வியாழன் அன்று. அந்தக் குழந்தைக்கு உடல்நலக்குறைவு. ஆறுமாத பச்சிளங்குழந்தை. உடல்நலக்குறைவு சரியாக மருத்துவமனைக்குத்தான் பொதுவாக செல்வோம். ஆனால் அந்தக் குழந்தையின் அம்மா செய்தது என்ன தெரியுமா?
குழந்தையைத் தூக்கிகொண்டு மந்திரவாதியிடம் சென்றிருக்கிறார். அந்த தாந்திரீக மந்திரவாதி அமானுஸ்ய சடங்குகள் செய்வதில் வல்லவராம். அப்படி நினைத்துத்தான் அந்த அம்மா குழந்தையைத் தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்.
அவரும் படம் காண்பித்திருக்கிறார். வினோதமான அந்த சடங்கு ?
கீழே நெருப்பு. யாகம் போலிருக்கிறது. குழந்தையை தூக்கிப் பிடித்து தலைகீழாக நெருப்புக்கு பக்கத்தில் காண்பித்திருக்கிறார் அந்த மந்திரவாதி.
அவ்வளவுதான். குழந்தையின் இரு கண்களின் கருவிழியும் பொசுங்கிப் போய்விட்டதாம். இனி அந்தக் குழந்தையின் பார்வை? எதிர்காலம் ?
குழந்தை தற்போது சிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில்.
லேசாக கைவிரலில் நெருப்புபட்டாலே வலி தாங்க முடியாது. உயிரை எடுக்கும்.
ஆனால் அந்த பச்சிளங்குழந்தை?? நினைத்துப் பாருங்கள்.
ஒன்றும் சொல்வதற்கில்லை.
நாம் எங்கிருக்கிறோம்?
( செய்தி இன்றைய 16-03-2025 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது. )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக