வியாழன், 1 ஜனவரி, 2026

2026

 புத்தாண்டு பிறந்துவிட்டது 



 

2026  ஐ மகிழ்வான செய்தியோடு தொடங்குவோம்.

 

சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற சில நிகழ்வுகளில்முக்கியமானது என்றால், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டகுழந்தைகள், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதுதான். நடைமுறைக்கும் வந்துவிட்டது.

பிறநாடுகளுக்கு முன்னுதாரணமான நிகழ்வு. அற்புதமான முடிவு.

இதைப் பார்த்த உடனேயே டென்மார்க்கும்மலேசியாவும்கூட தத்தம் நாடுகளில் அமல்படுத்த இருப்பதாக அறிவித்திருப்பது மேலும் வரவேற்கத்தக்க நிகழ்வாகத்தான் இருக்கிறது.

 

• செல்போன் பயன்பாட்டால்இளவயதில் சர்க்கரைநோய் பாதிப்பு - அதுவும் பள்ளி மாணவர்களிடையே.

 

• இளம்பருவத்தினரிடயே அதிகரிக்கும் கிட்டப்பார்வைகுறைபாடு- இதற்கும் செல்போனின் அதிகப்படியான பயன்பாடுதான் காரணம்

 

 

• கரோனாவுக்குப் பிறகு குழந்தைகளிடையே ஆட்டிசம் மாதிரியான குறைபாடுகள் அதிகரித்து வருகிறதாகற்றலில் பிரச்சினையாஎன்கிற அய்யம்.

இவை அனைத்துக்குமே செல்போன்தான் காரணம்.

 

செல்போன் பயன்பாட்டினைக் கட்டுப்படுத்துவது குறித்து பலரும் பேசிவருவதும் நல்ல மாற்றத்துக்கான வெளிப்பாடு.

இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவைப் போன்று, இங்கும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அறிவுறுத்தி இருக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக, முக்கியமான நிகழ்வாகத்தான் இதைப்பார்க்கவேண்டி இருக்கிறது..

 

ஏற்கனவே நாம் சொல்லியதுதான்ஓடியாடி விளையாடுதான் இதற்கு நல்ல தீர்வு. இது இயக்கமாக மாற வேண்டும்

2026- ன் தொடக்கத்தில் இருந்தே இதை செயல்படுத்த தீவிரமாக சிந்திப்போம்.