புதன், 14 அக்டோபர், 2026

வெளிச்சம்- Myopia Control

வெளிச்சம்

 

                                   

 

வெளிச்சம் வாழ்வோடு மட்டுமல்லாமல், பார்வையோடும் நெருங்கிய தொடர்புடையது. குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை வருவதைத் தடுப்பதில் வெளிச்சத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

‘வீட்டிலேயே இருட்டில் அடஞ்சு கிடக்காத தம்பி. வீட்டைவிட்டு வெளிச்சத்துக்கு வாப்பா. அப்பதான் வாழ்வு சிறப்பாக இருக்கும்.’  அன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் பிள்ளைகளைப் பார்த்து இப்படி சொல்வார்கள். இது கண்ணுக்கும் பொருந்தும்.

பிள்ளைகள் படிக்கும் அறை, நல்ல வெளிச்சத்தில் இருக்க வேண்டும். ‘மின்சாரத்தை சேமிக்கிறேன் பேர்வழி’ என்று சொல்லி சின்ன எல்.இ.டி விளக்கு கூடாது. 40 வாட்சில் நல்ல டியூப் லைட் போதுமான வெளிச்சத்தைத் தரும். அறை சற்று பெரியது என்றால் இரண்டு வேண்டும்.

நண்பர் ஒருவரின் பையன் கண்ணாடி அணிந்திருந்தான். அவர்களுடைய வீடு உயர்ந்த கூரை எனப்படும் high ceiling வகை வீடு. ஹாலில் ஒரே ஒரு எல்.இ.டி. டியூப் லைட்தான். அந்த ஹாலுக்கு அந்த வெளிச்சம் போதுமானதாக இல்லை. நண்பரிடம் இன்னொரு டியூப் லைட்டையும் எரியவிடச் சொன்னதற்கு, ஏன் தேவையில்லாமல் மின்சாரத்தை செலவிட வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

பையன் படிப்பதற்கு இந்த லைட் வெளிச்சம் போதாது. குறைந்த வெளிச்சத்தில், பையனின்  கிட்டப்பார்வை லென்சு பவர் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவேயில்லை. பையனுக்கு கிட்டப்பார்வை ஏற்பட்டதற்கே இந்த குறைவான வெளிச்சம் ஒரு முக்கிய காரணம்.

அண்மையில் அந்தப் பையனின் அப்பா போனில், பையனுக்கு கண்ணில் high power, கண்ணாடி பவர் அதிகமாகிவிட்டதாக சொல்லி வருத்தப்பட்டு, கண்ணாடி பவரைக் குறைப்பதற்கு என்ன செய்ய?’ என்று கேட்டார். சொல்வதற்கு என்ன இருக்கிறது?

 

 

.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக