அரைச் சர்க்கரை
குறுந்தொடர்
வாரம் 17
சர்க்கரைநோய் பாதிப்பினை குறைப்பது எப்படி?
சாப்பாடு தட்டில் அரைத்தட்டு காய்கறிகள்,கீரை.
தட்டில் கால்பகுதி - ராஜ்மா, கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள் ( புரதச்சத்து)
மீதி கால்பகுதி - கார்போஹைட்ரேட் – அரிசி/கோதுமை கவுனி அரிசி/ வரகு சாமை, குதிரை வாலி...இது உணவின் கிளைசெமிக் சுமையைக் குறைக்கிறது. தவிர வழக்கமான உடற்பயிற்சி, உடல் உழைப்பினை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பினை குறைக்க உதவும். அதிக உடல் பருமனானவர்கள் நீரிழிவினை தடுக்க கட்டாயம் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
சரியான நேரத்தில் படுத்து போதுமான நேரம் தூங்குவதும் மன உளைச்சலைக் குறைப்பதும் முக்கியம். கவனிக்கவும். இரவு நன்றாக போதுமான நேரம் தூங்குபவர்களுக்கு சர்க்கரைநோய் கட்டுப்படும். அப்படியானால் சரியாக தூங்கி எழாதவர்களுக்கு என்று ...நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம் அவர்களுக்கு சர்க்கரைநோய் ஏற்படுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமே.
இந்தியாவில் மக்கள்தொகையில் 11% பேருக்கு சர்க்கரைநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 15.3 % பேர் சர்க்கரைநோய்க்கு முந்தைய ( Pre Diabetic ) நிலையிலும் இருக்கிறார்கள்.
இது குறித்து இந்துவின் ரம்யா கண்ணன் என்ன சொல்கிறார். சர்க்கரைநோய் நிபுணர் டாக்டர்.மோகனின் கருத்து என்ன?
மருத்துவர் ரூபா மரியாவும், அரசியல் பொருளாதார நிபுணர் ராஜ்படேலும் என்ன சொல்கிறார்கள்?
பார்க்கலாம் அசத்தலான அலசலுடன் வரும் வாரம்..
தொடரும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக